ஹாக்கி

உலக ஆக்கி லீக்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா + "||" + World Hockey League: Australia at the finals

உலக ஆக்கி லீக்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

உலக ஆக்கி லீக்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா
3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை ஊதித்தள்ளியது. ஒர்தர்ஸ்பூன் (42–வது நிமிடம்), ஜெரிமி ஹேய்வர்ட் (48–வது நிமிடம்), விக்ஹாம் (60–வது நிமிடம்) ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் கோல் போட்டனர். முன்னதாக நடந்த 5–வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடக்கும் வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணி, இந்தியாவை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் இந்திய அணி ஜெர்மனியிடம் 0–2 என்ற கோல் கணக்கில் தோற்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவும் கோதாவில் இறங்குகின்றன. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்1 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.