ஹாக்கி

உலக ஹாக்கி லீக்: வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா + "||" + India beat Germany 2-1, win Hockey World League Finals 2017 bronze medal

உலக ஹாக்கி லீக்: வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

உலக ஹாக்கி லீக்: வெண்கலப் பதக்கம் வென்றது  இந்தியா
உலக ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.
புவனேஷ்வர்,

3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை ஊதித்தள்ளியது. 

இந்நிலையில் இன்று மாலை 5.15 மணிக்கு நடைபெற்ற வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணி, இந்தியாவை எதிர்கொண்டது. இந்திய அணி  ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  வெண்கலப் பதக்கம் வென்றது.

வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.