ஹாக்கி

4 நாடுகள் ஆக்கி பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி + "||" + 4 countries hockey India defeated Belgium

4 நாடுகள் ஆக்கி பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் ஆக்கி
பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி
ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது.
தாரங்கா,

ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. பெல்ஜியம் அணி தரப்பில் செபாஸ்டியன் டோகிர் 8-வது நிமிடத்திலும், விக்டர் வெக்னெஸ் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணியினருக்கு பெனால்டி கார்னர் உள்பட பல வாய்ப்புகள் கிடைத்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை தகர்க்க முடியவில்லை. முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இருந்த இந்திய அணி அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.