ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி: ஐ.சி.எப். அணி வெற்றி + "||" + State Hockey competition ICF Team wins

மாநில ஆக்கி போட்டி: ஐ.சி.எப். அணி வெற்றி

மாநில ஆக்கி போட்டி: ஐ.சி.எப். அணி வெற்றி
ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 6–0 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் அணி 10–0 என்ற கோல் கணக்கில் டாடா கன்சல்டன்சி அணியையும், அண்ணா பல்கலைக்கழக அணி 2–0 என்ற கோல் கணக்கில் கொங்கு என்ஜினீயரிங் அணியையும், தெற்கு ரெயில்வே அணி 5–2 என்ற கோல் கணக்கில் செயின்ட் பால்ஸ் கிளப்பையும் தோற்கடித்தன.