இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது பாகிஸ்தான்


இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 15 Feb 2018 1:16 PM GMT (Updated: 15 Feb 2018 1:16 PM GMT)

வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லி,

உலக கோப்பை ஹாக்கி  தொடர் இந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க 13-வது அணியாக பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. லண்டனில் நடைபெறும் யூரோ ஹாக்கி சாம்பியன்சிப் போட்டி தொடரில் 7-வது இடம் பெற்றதன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் ஹாக்கி அணி விளையாட உள்ளது. 

இது வரை நடந்த உலக கோப்பை ஹாக்கி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் அணியின் வருகையால், உலக கோப்பை தொடர் மேலும் விறுவிறுப்பை கூட்டும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் ஹாக்கி அணி 1971,1978,1982, மற்றும் 1994 என நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 இந்த முறை இந்தியா உலக கோப்பை தொடரை நடத்துவதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இந்திய ஹாக்கி அணி உள்ளது. இந்தியா 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி நடத்தப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் இந்த தொடர் நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஒடிசாவில் உள்ள புவனேஷர் நகரில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Next Story