ஹாக்கி

மாநில ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + State junior Hockey Competition Start in Chennai today

மாநில ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

மாநில ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 7–வது மாநில ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 7–வது மாநில ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது. மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், கால்நடை மருத்துவ கல்லூரி மைதானம், மதரசா பள்ளி மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்பட 30 மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எஸ்.மலர்செல்வம் தெரிவித்துள்ளார்.