ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணிக்கு 2–வது வெற்றி + "||" + State Hockey Competition: Central Excise Tax Team 2nd win

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணிக்கு 2–வது வெற்றி

மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணிக்கு 2–வது வெற்றி
ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மத்திய கலால் வரி அணி 3–1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. தெற்கு ரெயில்வே அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு இருந்த ஐ.சி.எப். அணி முதல் தோல்வியை சந்தித்தது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே–ஐ.ஓ.பி. (மாலை 4 மணி), ஐ.சி.எப்.–மத்திய கலால் வரி (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.
2. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு
ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது.
4. அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.
5. அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.