ஹாக்கி

மாநில ஜூனியர் ஆக்கி திருச்சி அணி ‘சாம்பியன்’ + "||" + State junior Hocky Trichy team champion

மாநில ஜூனியர் ஆக்கி திருச்சி அணி ‘சாம்பியன்’

மாநில ஜூனியர் ஆக்கி திருச்சி அணி ‘சாம்பியன்’
7-வது மாநில ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 7-வது மாநில ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் திருச்சி மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் நாமநாதபுரம் மாவட்ட அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. திருச்சி அணியில் கார்த்திக் 3 கோலும், பாலகணேஷ் ஒரு கோலும் அடித்தனர். ராமநாதபுரம் அணி தரப்பில் அபிஷேக் ஒரு பதில் கோல் திருப்பினார். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியலூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் அணியை தோற்கடித்தது. பரிசளிப்பு விழாவில் வருமானவரி கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். கால்நடை மருத்துவ கல்லூரி விளையாட்டு செயலாளர் சங்கரன், தமிழ்நாடு ஆக்கி யூனிட் பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி, போட்டி அமைப்பு குழு செயலாளர் மலர்செல்வம், காஞ்சீபுரம் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஜான்சி ராணி, சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.