ஹாக்கி

குளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி + "||" + Winter Olympics Ice hockey match America qualifies for the final

குளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி

குளிர்கால ஒலிம்பிக்: ஐஸ் ஆக்கி போட்டியில் அமெரிக்கா இறுதிபோட்டிக்கு தகுதி
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஐஸ் ஆக்கி அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பியாங்சாங்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஐஸ் ஆக்கி போட்டியின் பெண்கள் பிரிவு அரைஇறுதியில் அமெரிக்கா-பின்லாந்து அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் கனடா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் சந்திக்கின்றன. வெண்கலப்பதத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து-ரஷியா அணிகள் மோதுகின்றன.

பிகர் ஸ்கேட்டிங் ஐஸ் ஷாட் டான்ஸ் பிரிவில் கனடாவின் தெஸ்சா விர்ட்யூ-ஸ்காட் மொய்ட் ஜோடி அபாரமாக செயல்பட்டு 83.67 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. பிரான்ஸ்சின் பாபாடாகிஸ் கேபரில்லா-சிசரோன் சிவிலாம் இணை 81.93 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் ஹூப்பெல் மேடிசன்-டோனாஹூ ஜோடி 77.75 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

ஆண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பந்தயத்தில் நார்வே வீரர் ஹவர்ட் லோரென்ட்சென் 34.41 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் இந்த பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். தென்கொரியா வீரர் ஷா மின் கியூ 34.42 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், சீன வீரர் கா டிங்யு 34.65 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

11-வது நாளான நேற்றைய முடிவில் நார்வே அணி 11 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 28 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 2-வது இடத்திலும் (10 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்), கனடா 3-வது இடத்திலும் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) உள்ளன.