உலக கோப்பை ஆக்கி: எதிரெதிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்


உலக கோப்பை ஆக்கி: எதிரெதிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Feb 2018 9:11 PM GMT (Updated: 28 Feb 2018 9:13 PM GMT)

14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி நவம்பர் 28–ந்தேதி முதல் டிசம்பர் 16–ந்தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

புதுடெல்லி,

14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி நவம்பர் 28–ந்தேதி முதல் டிசம்பர் 16–ந்தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளின் பிரிவு விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதன்படி ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ‘பி’ பிரிவில் நம்பர் ஒன் அணியும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, ‘சி’ பிரிவில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெல்ஜியம், தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, ‘டி’ பிரிவில் ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்குள் நுழையும். 2–வது மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணிக்கு கால்இறுதி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவம்பர் 28–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.


Next Story