ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி + "||" + State Hockey Competition Sai team wins the opening match

மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி
இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘நாக்–அவுட்’ முறையில் வருகிற 7–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் இந்தியன் வங்கி இயக்குனர் பி.விட்டல்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வகித்தார். இந்தியன் வங்கி விளையாட்டு கமிட்டி தலைவர் மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்க ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்)–வருமானவரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சாய் அணி 3 வாய்ப்புகளை கோலாக்கியது. வருமான வரி அணி 2 வாய்ப்புகளை மட்டுமே கோலாக மாற்றியது. முடிவில் சாய் அணி 4–3 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு ஜூனியர்–தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே–ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.
2. அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
3. சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.
4. அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
5. ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவிடம் தோல்வி
ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.