ஹாக்கி

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி:இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’ + "||" + The Azlan Shah Cup Hockey: India-England match 'Draw'

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி:இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி:இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’
27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.
இபோக்,

27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தனது தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்திய அணியில் லக்ராவும் (14-வது நிமிடம்), இங்கிலாந்து அணியில் மார்க் ஜிலெஹோர்னேவும் (52-வது நிமிடம்) கோல் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் அர்ஜென்டினா 5-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தையும், ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்து தங்களது 2-வது வெற்றியை பதிவு செய்தன. இந்திய அணி அடுத்து உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதுகிறது.