மாநில ஆக்கி போட்டி இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே- ஐ.சி.எப். அணிகள் மோதல்


மாநில ஆக்கி போட்டி இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே- ஐ.சி.எப். அணிகள் மோதல்
x
தினத்தந்தி 6 March 2018 10:30 PM GMT (Updated: 6 March 2018 7:55 PM GMT)

மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே- ஐ.சி.எப். அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதிப்போட்டியில் ஐ.சி.எப். அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் தெற்கு ரெயில்வே அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆக்கி அகாடமியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று மாலை 5.15 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே-ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஆக்கி அகாடமி அணிகள் சந்திக்கின்றன.

Next Story