ஹாக்கி

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி + "||" + The Indian team was shocked by Ireland

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.
இபோக், 

6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை பதம் பார்த்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடியது.

லீக் சுற்று முடிவில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியும் (15 புள்ளிகள்), 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.

அர்ஜென்டினா (7 புள்ளி), மலேசியா (6 புள்ளி) அணிகள் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியை சந்தித்த இந்திய அணியும் (4 புள்ளிகள்), ஒரு வெற்றி, 4 தோல்வி கண்ட அயர்லாந்து அணியும் (3 புள்ளிகள்) 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் சந்திக்கின்றன.