அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி - ஆஸ்திரேலிய அணி சாம்பியன்


அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி - ஆஸ்திரேலிய அணி சாம்பியன்
x
தினத்தந்தி 10 March 2018 9:34 PM GMT (Updated: 10 March 2018 9:34 PM GMT)

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இபோக்,

27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்காமல் 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோல்வி கண்ட இங்கிலாந்து அணி 2-வது இடம் பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் பிளாக் கோவர்ஸ் 38-வது நிமிடத்திலும், லாச்லன் ஷார்ப் 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது இடத்தை தனதாக்கியது. 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை சாய்த்து முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு (2-3) பதிலடி கொடுத்தது. இந்திய அணி சார்பில் வருண்குமார் 5-வது மற்றும் 32-வது நிமிடத்திலும், ஷிலானந்த் லக்ரா 28-வது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அயர்லாந்து அணி தரப்பில் டாலே ஜூலியன் 40-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

Next Story