ஹாக்கி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம் + "||" + Common wealth games : Indian hockey team removal of sardarsingh

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்
சமீபத்தில் மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த சீனியர் வீரர் சர்தார்சிங் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. சமீபத்தில் மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த சீனியர் வீரர் சர்தார்சிங் அணியில் இருந்து அதிரடியாக கழற்றி விடப்பட்டிருக்கிறார். கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக சிங்லென்சனா சிங்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், சுரஜ் கார்கெரா, பின்களம்: ரூபிந்தர் பால்சிங், ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், கோதாஜித் சிங், குரிந்தர்சிங், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணைகேப்டன்), சுமித், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: ஆகாஷ்தீப்சிங், சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப்சிங், லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத்சிங்.

காமன்வெல்த் விளையாட்டில், ஆக்கி பிரிவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இங்கிலாந்து, மலேசியா, பாகிஸ்தான், வேல்ஸ் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இந்திய அணி அங்கம் வகிக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...