ஹாக்கி

பெண்கள் ஆக்கி - தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி + "||" + Women Hockey - Indian team fail in the opening match

பெண்கள் ஆக்கி - தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

பெண்கள் ஆக்கி - தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
பெண்கள் ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
கோல்ட் கோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் வேல்ஸ், மலேசியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று வேல்ஸ் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் வேல்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ராணி ராம்பால் 34-வது நிமிடத்திலும், நிக்கி பிரதான் 41-வது நிமிடத்திலும் கோல் திருப்பினார்கள். வேல்ஸ் அணியில் டாலே லிசா 7-வது நிமிடத்திலும், பிரெஞ்ச் ஸ்லான் 26-வது நிமிடத்திலும், மார்க் ஜோன்ஸ் நடாஷா 57-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று (பிற்பகல் 2.30 மணி) மலேசியாவை எதிர்கொள்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...