பெண்கள் ஆக்கியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா


பெண்கள் ஆக்கியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா
x
தினத்தந்தி 8 April 2018 11:00 PM GMT (Updated: 8 April 2018 7:18 PM GMT)

பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி (பி பிரிவு) வேல்சை சந்தித்தது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் டிராவில் முடியலாம் என்று எதிர்பார்த்த வேளையில் 59-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை இந்திய மூத்த வீரர் எஸ்.வி. சுனில் அடித்தார். இந்திய அணி தனது கடைசி லீக்கில் மலேசியாவுடன் நாளை மோதுகிறது.

பெண்கள் ஆக்கி பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, உலகின் 2-ம் நிலை அணியும், ஒலிம்பிக் சாம்பியனுமான (ஏ பிரிவு) இங்கிலாந்துடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய வீராங்கனைகள் நவ்னீத் கவுர் (41-வது நிமிடம்), குர்ஜித் கவுர் (47-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்திய கேப்டன் ராணி கூறுகையில், ‘இங்கிலாந்தை நாங்கள் முதல்முறையாக வீழ்த்தி இருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீராங்கனைகள் இதற்கு முன்பு இங்கிலாந்துடன் விளையாடியது இல்லை. இதனால் அவர்கள் உற்சாகமுடன் களம் கண்டனர். இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியான அணி’ என்றார்.

Next Story