ஹாக்கி

காமன்வெல்த் பெண்கள் ஆக்கியில் இந்திய அணி தோல்வி + "||" + Commonwealth Women Hockey The Indian team failed

காமன்வெல்த் பெண்கள் ஆக்கியில் இந்திய அணி தோல்வி

காமன்வெல்த் பெண்கள் ஆக்கியில் இந்திய அணி தோல்வி
காமன்வெல்த் விளையாட்டு ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

*காமன்வெல்த் விளையாட்டு ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 0–1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்திய அணி அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஆண்கள் ஆக்கி பிரிவில் இன்று நடக்கும் அரைஇறுதியில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.

*ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்–சவுரவ் கோ‌ஷல் ஜோடி 2–0 என்ற செட் கணக்கில் வேல்ஸ் நாட்டை சேர்ந்த டெஸ்னி இவான்ஸ்–பீட்டர் கிரீட் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா–ஹரிந்தர் பால் சந்து ஜோடி 0–2 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் ஜோலே கிங்–பால் கோல் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

*டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சரத்கமல், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்–மவுமா தாஸ், சத்யன்–மனிகா பத்ரா ஜோடியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்–சத்யன் இணையும் கால்இறுதியை எட்டியது.


ஆசிரியரின் தேர்வுகள்...