ஹாக்கி

காமன்வெல்த் போட்டி: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் தோல்வி + "||" + Commonwealth Games: Indian men Hockey team semi final failed

காமன்வெல்த் போட்டி: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் தோல்வி

காமன்வெல்த் போட்டி: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் தோல்வி
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி, தரவரிசையில் பின்தங்கிய நியூசிலாந்தை எதிர்கொண்டது.

கோல்டுகோஸ்ட், 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி, தரவரிசையில் பின்தங்கிய நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து 13 நிமிடங்களுக்குள் 2 கோல்களை திணித்தது. இந்திய வீரர் ஹர்மன்பிரீத்சிங் 29–வது நிமிடத்தில் ஒரு கோல் திருப்பினார். பிறகு 40–வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் மார்கஸ் சைல்டு, கோல் போட்டு 3–1 என்ற கணக்கில் தங்கள் அணியின் முன்னிலையை வலுப்படுத்தினார். கடுமையாக போராடிய இந்திய அணியில் 57–வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத்சிங் மேலும் ஒரு கோல் போட்டார். முடிவில் நியூசிலாந்து அணி 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2010, 2014–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த இந்திய அணி இந்த முறை இறுதி சுற்றை கூட எட்டாமல் ஏமாற்றம் அளித்திருக்கிறது. கிடைத்த 9 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 8–ஐ வீணாக்கியதும், தடுப்பாட்ட பலவீனமும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்திய அணி இன்று நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.