ஹாக்கி

இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி: இந்திய அணிகள் அபாரம் + "||" + Hockey: India thrash Thailand 25-0 at Asian Youth Olympic Games Qualifier

இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி: இந்திய அணிகள் அபாரம்

இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி: இந்திய அணிகள் அபாரம்
இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் ஆடவர் அணி 25-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
தாய்லாந்தில் நடைபெறும் இளைஞர்  ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி தொடக்கச் சுற்றில்ல் இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

மகளிர் அணி 14-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரையும், ஆடவர் அணி 25-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

இந்திய மகளிர் அணியில் சங்கீதா, மும்தாஜ், லால்ரெம்சியாமி, இஷிகா சவுத்ரா, தீபிகா ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். ஆடவர் போட்டியில் இந்திய அணி தரப்பில் முகமது அலிஷான், ராகுல்குமார், ரவிச்சந்திரன், விவேக் சாகர், ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

மகளிர் அணி அடுத்த போட்டியில் கொரியாவும், ஆடவர் அணி ஜப்பானையும் எதிர்கொள்கின்றன. இப்போட்டியில் வெல்லும் அணிகள் அர்ஜென்டிவான் பியனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெறவுள்ள யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறும்.