ஹாக்கி

யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி + "||" + Youth Olympic Hockey Qualifiers: India's team win over South Korea

யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. #YouthOlympicHockey
பாங்காக்,

பாங்காக்கில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியா அணியை 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனியர் மகளிர் அணி அபார வெற்றியை ருசித்தது. இதே போல் மற்றோரு போட்டியில் இந்திய ஆடவர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.


அர்ஜென்டினா பியனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடக்கின்றன. இதற்கான ஹாக்கி தகுதிப் போட்டிகள் பாங்காக்கில் நடந்து வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் எளிதாக வெற்றி பெற்றன. அதே நேரத்தில் வியாழக்கிழமை நடந்த தென்கொரியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, மும்தாஸ் கான், தீபிகா ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல்கள் அடித்தனர்.
 
ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகர், ராகுல்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
ஆடவர் அணி அடுத்து ஹாங்காங், தென்கொரியாவையும், மகளிர் அணி தாய்லாந்தையும் எதிர்கொள்கின்றன.