யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி; இந்திய ஜூனியர் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின


யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி; இந்திய ஜூனியர் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின
x
தினத்தந்தி 29 April 2018 1:30 AM GMT (Updated: 29 April 2018 1:30 AM GMT)

யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின. #YouthOlympics

பாங்காக்,           

அர்ஜெண்டினாவின் பியனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதற்கான ஹாக்கி பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஜூனியர் ஆடவர் அணி 9-2 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே போல் மகளிர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது.

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிவம் ஆனந்த், ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் ராகுல் குமார், மணிந்தர் சிங், விவேக் சாகர் பிரசாத், முகமது அலிஷான் ஆகியோரும் சிறப்பாக விளையாடி கோலடித்தனர். மகளிர் பிரிவில் மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் செட்னா. இஷிகா செளத்ரி, சலிமா, சங்கீதாகுமாரி ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியா மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

மலேசியா - கொரியா இடையே நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆடவர் இந்திய அணியை எதிர்கொள்ளும்.


Next Story