ஹாக்கி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் + "||" + Harendra new men's hockey coach, Marijne to return to women's camp

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோர்டு மரினே இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.' சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் பதவி வகித்தார்.

இந்நிலையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளரான ஜோர்டு மரினே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மிகவும் மோசமாக விளையாடியது. கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெறாமல் திரும்பியதில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இன்று நடைபெற்ற ஹாக்கி சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹரேந்திர சிங் 2016-ம் ஆண்டு இந்திய ஜூனியர் ஹாக்கி அணி உலகக்கோப்பை பெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம் ஊஞ்சலூர் அருகே பரபரப்பு
ஊஞ்சலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு அளவீடு பணி
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி அளவீடு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
3. துளிகள்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.
4. ஊட்டி நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற கோரிக்கை
ஊட்டி நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5. மாடல் அழகி பாலியல் பலாத்கார விவகாரம் : கிறிஸ்டியானோ ரொனால்டோ டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவு
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் தொடுத்த வழக்கில், டி.என்.ஏ சோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...