ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + Make the Asian Champions Cup; Indian women's team announcement

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகளுக்காக இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் வருகிற 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி 13-ந் தேதி ஜப்பானையும், 16-ந் தேதி சீனாவையும், 17-ந் தேதி மலேசியாவையும், 19-ந் தேதி தென்கொரியாவையும் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ராணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா, ஸ்வாதி, பின்களம்: தீபிகா, சுனிதா லக்ரா (கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி, நடுகளம்: மோனிகா, நமிதா, நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதிதா, முன்களம்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், அனுபமா பார்லா.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றுள்ளார். #AsianGames2018
2. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
3. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா ஆட்டம் டிரா ஆனது.