ஹாக்கி

மாநில ஹாக்கி போட்டி; சென்னை காவல் துறை அணிக்கு சாம்பியன் பட்டம் + "||" + State hockey tournament; Champion of Chennai Police Department

மாநில ஹாக்கி போட்டி; சென்னை காவல் துறை அணிக்கு சாம்பியன் பட்டம்

மாநில ஹாக்கி போட்டி; சென்னை காவல் துறை அணிக்கு சாம்பியன் பட்டம்
மாநில ஹாக்கி போட்டியில் சென்னை காவல் துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது. #StateHockey
உடுமலை,

உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வெற்றி பெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஹாக்கி கிளப் சார்பில் 5வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை மாநகரக் காவல் துறை அணியும், மதுரை திருநகர் அணியும் மோதின.

இதில், 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வென்றது. இதில் மதுரை ரிசர்வ் லைன் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.