ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி; துவக்க ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் மகளிர் அணிகள் மோதல்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி; துவக்க ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் மகளிர் அணிகள் மோதல்
x
தினத்தந்தி 13 May 2018 1:28 AM GMT (Updated: 13 May 2018 1:28 AM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் துவக்க ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் மகளிர் அணிகள் மோத உள்ளன. #AsianChampionsTrophy

தென்கொரியா,

தென்கொரியாவின் டோங்கேசிட்டியில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி துவக்க ஆட்டத்தில் ஜப்பான் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.

5-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் தென்கொரியாவின் டோங்கேசிட்டி நகரில் நடக்கிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வலுவான ஜப்பான் அணியுடன் இந்தியா மோதுகிறது. மகளிர் அணியின் புதிய கேப்டனாக சுனிதா லக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகின் 12ம் இடத்தில் உள்ள ஜப்பான் கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வென்றிருந்தது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு சீனாவை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.

மேலும், ‘ஜப்பான் உடன் மோதும் ஆட்டம் கடினமாக இருக்கும். தரமான அணியான அவர்களின் தற்காப்பை தகர்த்து தொடக்கத்திலே கோல் அடிக்க வேண்டும். காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பலமான அணிகளுடன் நாம் சிறப்பாக ஆடியுள்ளோம். எனவே அந்த நம்பிக்கையோடு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை எதிர்நோக்கி உள்ளோம் என்று கேப்டன் சுனிதா கூறினார்.

Next Story