ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி + "||" + Asian Hockey Champions Cup; Indian women's team win 2nd

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி பெற்றது.
டோங்கா சிட்டி,

5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தொடர் தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 8-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் வந்தனா 4-வது மற்றும் 11-வது நிமிடங்களில் கோல் அடித்தார். குர்ஜித் கவுர் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று இருந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் (காலை 11 மணி) மோதுகின்றன.