ஹாக்கி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம் + "||" + India beat Malaysia to reach women's Asian Champions Trophy final

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி  இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில், மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி, இறுதிக்கு முன்னேறியது.
டோங்கே சிட்டி:

தென் கொரியாவில், மகளிருக்கான 5-வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி  நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா மற்றும் தென் கொரியா என, 5 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஜப்பான் (4-1), சீனாவை (3-1) வென்ற இந்திய அணி, இன்று தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. இதில் 3-2 என, கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதையடுத்து 3 போட்டியில், 9 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்கு  முன்னேறி உள்ளது