ஹாக்கி

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் - கேப்டன் ஸ்ரீஜேஷ் + "||" + Champions Cup hockey tournament: will be an opportunity to know the team's capability - Captain Sreejesh

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் - கேப்டன் ஸ்ரீஜேஷ்

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் - கேப்டன் ஸ்ரீஜேஷ்
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்திய அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.
பெங்களூரு,

உலகின் முன்னணி அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நெதர்லாந்தின் பிரெடா நகரில் வரும் 23-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை  நடக்கிறது.

வரும் டிசம்பர் மாதம் புவனேஸ்வரில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் நெதர்லாந்து, பாகிஸ்தான், அர்ஜென்டீனா, பெல்ஜியம், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவிக்கையில், ‘இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இதில் 23-ந் தேதி பாகிஸ்தானுடன் முதல் ஆட்டத்தில் இந்தியா மோத உள்ளது. வெற்றி பெறுவதே எங்களுக்கு முக்கியம். கடந்த முறை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தோம். ஆனால் தற்போது சூழல் மாறி விட்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளோம். இந்தப் போட்டிகள் மூலம் அணியின் திறனை மதிப்பிட ஒரு வாய்ப்பாக அமையும்’ என அவர் கூறினார்.