ஹாக்கி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: துவக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல் + "||" + Champions trophy hockey: India and Pakistani players clash in opening match

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: துவக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல்

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: துவக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தானை இன்று எதிர்கொள்ள உள்ளது. #ChampionsTrophy2018
பிரெடா,

உலகின் முன்னணி அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நெதர்லாந்தின் பிரெடா நகரில் இன்றுமுதல் ( 23-ந் தேதி) ஜூலை 1-ந் தேதி வரை நடைபெற உள்ளன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மோசமான தோல்விக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி இன்று களமிறங்குகிறது. இன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர் கொள்கிறது.


சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உலகின் சிறந்த ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒலிம்பிக் சாம்பியன்களான அர்ஜென்டீனா, உலகின் No.1 ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதில் துவக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. மேலும் ஜூன் 24-ந் தேதி நடக்கும் போட்டியில் அர்ஜென்டீனாவையும், ஜூன் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், ஜூன் 28-ந் தேதி பெல்ஜியத்தையும், ஜூன் 30-ந் தேதி நெதர்லாந்து அணியையும் இந்தியா எதிர் கொள்ள உள்ளது.

இன்று நடைபெற உள்ள போட்டி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  உலகத்தர வரிசையில் இந்தியா 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 13-வது இடத்திலும் உள்ளன. இருந்த போதும் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்
ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம் என்று டாசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது - ரகுராம்ராஜன் கருத்து
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது என ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
3. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
4. இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்: அமெரிக்கா கருத்து
இலங்கையில் உச்ச கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
5. ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா
ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.