சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந்திய அணி


சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந்திய அணி
x
தினத்தந்தி 24 Jun 2018 12:16 PM GMT (Updated: 24 Jun 2018 12:16 PM GMT)

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. #ChampionsTrophyHockey

பிரெடா, 

உலகின் முன்னணி அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நெதர்லாந்தின் பிரெடா நகரில் நேற்று (ஜூன் 23) தொடங்கியது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற துவக்கப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தனர். இதனிடையே இன்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொண்டது.  

ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது வெற்றி இந்திய அணி பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் மிக துல்லியமாக கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். 

இதனிடையே உலகின் சிறந்த ஆறு அணிகள் (அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா) பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரு வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Next Story