ஹாக்கி

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி + "||" + Champions Trophy: made the Australian team defeat India

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
பிரிடா,

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லாச்லன் ஷார்ப் 6-வது நிமிடத்திலும், கிரேக் டாம் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 15-வது நிமிடத்திலும், மிட்டென் டிரென்ட் 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் வருண்குமார் 10-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள். இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்-1 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மோதுகின்றன.
2. ரபேல் விவகாரம்: முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்சு அரசு விளக்கம்
ரபேல் ஒப்பந்த பிரச்சினையில் பிரான்சு முன்னாள் அதிபர் ஹோலண்டே கருத்து குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து
இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
4. ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.