ஹாக்கி

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா–இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’ + "||" + Women World Cup Hockey India-England match 'Draw'

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா–இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா–இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’
லண்டனில் நேற்று தொடங்கிய பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

லண்டன், 

லண்டனில் நேற்று தொடங்கிய பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பெண்கள் ஆக்கி

14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 5–ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, தென்கொரியா, இத்தாலி, சீனா ‘பி’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, அயர்லாந்து, ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2–வது மற்றும் 3–வது இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றில் மோத வேண்டும். பிளே–ஆப் சுற்றில் வெற்றி காணும் 4 அணிகள் கால்இறுதியை எட்டும்.

டிரா ஆனது

முதல் நாளான நேற்று ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்த மோதலில் 25–வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நேகா கோயல் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். பதிலடி கொடுக்க வரிந்து கட்டிய இங்கிலாந்து வீராங்கனைகளின் பல முயற்சிகளை இந்திய கோல் கீப்பர் சவிதா முறியடித்தார். 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணாக்கிய இங்கிலாந்து 54–வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றியது. இந்த கோலை லில்லி ஆவ்ஸ்லே அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 26–ந்தேதி எதிர்கொள்கிறது.

ஜெர்மனி வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி 3–1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் சீனா–இத்தாலி, நெதர்லாந்து–தென்கொரியா, அர்ஜென்டினா–ஸ்பெயின், நியூசிலாந்து–பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை
புவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக அணியான சீனாவை எதிர்கொண்டது.
2. பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்
உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஈரோடு அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
ஈரோடு அருகே ஆர்.என்.புதூர் சொட்டையம்பாளையம் வயக்காட்டுப்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
4. அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
5. பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தொழுவம் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த தொழுவம் அகற்றப்பட்டது.