ஹாக்கி

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா + "||" + Women's Hockey World Cup: India Outclass Italy 3-0 To Enter Quarters

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

பெண்கள் உலக கோப்பை  ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் இந்திய அணி நுழைந்தது.
லண்டன்,

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 

2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் ‘பிளே-ஆப்’ (நாக்-அவுட்) சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த போட்டி தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, இத்தாலியை எதிர்கொண்டது.  இந்த போட்டியில் அபார ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. பெனால்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீராங்கனைகள், மூன்று கோல்கள் அடித்தனர். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில், இந்திய அணி 3-0 என்ற  கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம், வரும் வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது. தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா சதம் கடந்து அபாரம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது.
2. இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை: இலங்கை அரசு விளக்கம்
இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்
நட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.
4. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம்
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் வென்றது.
5. பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்!
பராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.