‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்போம்’ - இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் நம்பிக்கை


‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்போம்’ - இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2018 10:00 PM GMT (Updated: 16 Aug 2018 6:53 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்போம் என இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜகர்தா,

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நாளை முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. வருகிற 20-ந் தேதி நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது. போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆக்கி அணி இதுவரை தொடர்ச்சியாக 2 முறை தங்கப்பதக்கத்தை வென்றதில்லை. தங்கப்பதக்கத்தை மீண்டும் வென்று அந்த சரித்திரத்தை நாங்கள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேநேரத்தில் அதீத நம்பிக்கை கொள்ளவில்லை. எந்தவொரு எதிரணியையும் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்பது எங்களுக்கு தெரியும். இந்த போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Next Story