ஹாக்கி

14 அணிகள் பங்கேற்கும் சீனியர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + Senior Division Hockey League Competition Start in Chennai today

14 அணிகள் பங்கேற்கும் சீனியர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

14 அணிகள் பங்கேற்கும் சீனியர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சென்னை, 

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 14 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஐ.ஓ.பி, ஜி.எஸ்.டி., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், இந்திய உணவு கழகம், இந்திரா காந்தி நினைவு கிளப், ஏ.பி.என்.இன்போ டெக் அணிகளும், ‘பி’ பிரிவில் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., ஏ.ஜி.அலுவலகம், சாய், சென்னை மாநகர போலீஸ், வருமான வரி, சென்னை துறைமுக கழகம் அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.80 ஆயிரமும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். முதல் ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ்–சாய் அணிகள் மோதுகின்றன. போட்டியை, மத்திய சேவை வரி மற்றும் கலால் வரி கூடுதல் கமி‌ஷனர் சரவணகுமரன் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சென்னை ஆக்கி சங்க தலைவர் வி.பாஸ்கரன், பொதுச்செயலாளர் எம்.எஸ். உதயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.