தேசிய செய்திகள்

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி + "||" + Jinson Johnson Wins 1500m Gold Malaysia Stun India to Enter Hockey Final

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றுள்ளார். #AsianGames2018


இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றுள்ளார். வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

பிரிவு ஆட்டத்தில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பான் அணியை 8-0 என்ற கோல் கணக்கிலும் கொரியாவுக்கு எதிராக 5-3 என்ற கோல் கணக்கிலும், இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா. இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டம் மலேசியா வசம் சென்றது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து
‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.
2. மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா ! உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
3. தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு
ரஷியாவில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்கிறோமே தவிர, தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல் ! இந்திய அணி 195 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 195 ரன்கள் குவித்துள்ளது.
5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.