ஹாக்கி

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் + "||" + Asian Games 2018 womens Hockey Japan beat India 2-1 win gold

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. #AsianGames2018இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் மகளிர் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியை எதிர்க்கொண்டது. 1982–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை. அந்த தாகத்தை இந்திய அணி தணிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஜப்பானும், இந்தியாவும் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இந்திய அணிக்கு இன்று வெற்றி நாளாக அமையவில்லை, போட்டி 2-1 என்ற கணக்கில் ஜப்பானிடம் சென்றது. இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றுள்ளது.