அகில இந்திய ஆக்கி: கடற்படை அணிக்கு 2-வது வெற்றி


அகில இந்திய ஆக்கி: கடற்படை அணிக்கு 2-வது வெற்றி
x
தினத்தந்தி 7 Sep 2018 10:00 PM GMT (Updated: 7 Sep 2018 6:58 PM GMT)

அகில இந்திய ஆக்கி கடற்படை அணி, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.


92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியை விரட்டியடித்தது.

Next Story