ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி + "||" + All India Hockey: Punjab Sindhu 2nd team win

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி

அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 5–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை–இந்தியன் ஆயில் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய கடற்படை அணியில் ஜூக்ராஜ்சிங் 19–வது நிமிடத்திலும், இந்தியன் ஆயில் அணியில் குர்ஜிந்தர்சிங் 60–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி அணி, பெங்களூரு ஆக்கி சங்க அணியை சந்தித்தது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி அணி 6–5 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை சாய்த்து 2–வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஓ.என்.ஜி.சி.–இந்திய ராணுவம் (பிற்பகல் 2.30 மணி), சென்னை ஆக்கி சங்கம்–பெங்களூரு ஆக்கி சங்கம் (மாலை 4.15 மணி), மத்திய செயலகம்–மும்பை ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.
2. அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
3. சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.
4. ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவிடம் தோல்வி
ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
5. ஆசிய விளையாட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் 4 பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.