ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + All India Hockey: Military team Progress to semi-final

அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்–நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி. (ஏ பிரிவு) அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ராணுவ அணி ஆட்ட நேரம் முடிவில் 3–2 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. சென்னை ஆக்கி சங்கம்–பெங்களூரு ஆக்கி சங்க அணிகள் மோதிய ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியால் கடைசி வரை தனது முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து ஆட்டத்தை சமன் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் மத்திய அமைச்சக அணி 2–0 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியை தோற்கடித்து 2–வது வெற்றியை தனதாக்கியது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே–மத்திய அமைச்சகம் (பிற்பகல் 2.30 மணி), பஞ்சாப் சிந்து வங்கி–இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.