ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’ + "||" + All India Hockey: IOC Team 'champion'

அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’

அகில இந்திய ஆக்கி: ஐ.ஓ.சி. அணி ‘சாம்பியன்’
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

சென்னை, 

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரே‌ஷன் (ஐ.ஓ.சி.), இந்தியன் ரெயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அசத்திய ஐ.ஓ.சி. அணி 4–0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4–வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஐ.ஓ.சி. அணியில் ரோ‌ஷன் மின்ஸ் (14–வது நிமிடம்), குர்ஜிந்தர் சிங் (18–வது நிமிடம்), தல்விந்தர்சிங் (21–வது நிமிடம்), பாரத் சிக்ரா (52–வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வாகை சூடிய ஐ.ஓ.சி. அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த ரெயில்வே அணிக்கு ரூ.2½ லட்சம் கிடைத்தது. இது தவிர, சிறந்த முன்கள வீரராக பர்தீப்சிங் (ரெயில்வே), சிறந்த நடுகள வீரராக பவால் லக்ரா (இந்திய ராணுவம்), சிறந்தகோல் கீப்பராக குர்விந்தர்சிங் (பஞ்சாப் சிந்து வங்கி), தொடரின் சிறந்த வளரும் வீரராக வீர தமிழன் (சென்னை ஆக்கி சங்கம்), ஆட்டநாயகனாக குர்ஜிந்தர்சிங் (ஐ.ஓ.சி.) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.
2. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு
ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது.
4. அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
5. சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.