ஹாக்கி

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் + "||" + AR Rahman and Gulzar to compose Hockey World Cup title song

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான துவக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்கிறார். #HockeyWorldCup
புவனேஷ்வர்,

ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் 28-ந் தேதி, 14-வது உலகக்கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் பழம்பெரும் எழுத்தாளர் குல்சார் சஹாப் எழுத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலகக்கோப்பைக்கான பாடலை இசையமைத்து பாடவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். உலகக்கோப்பை போட்டியின் துவக்க விழாவில் நேரடி நிகழ்ச்சியில் ரஹ்மான் பங்கேற்பார் எனக் கூறினார்.