ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம் + "||" + Asian Champions Cup: Captain of the Indian ODI team Manpreeting appointment

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது.

புதுடெல்லி, 

நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டில் இந்திய அணியின் சொதப்பல் எதிரொலியாக ஸ்ரீஜேஷ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக நடுகள வீரர் மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஸ்ரீஜேஷ் கோல் கீப்பராக நீடிக்கிறார்.

ஆசிய சாம்பியன்ஸ் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:– மன்பிரீத்சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), ஸ்ரீஜேஷ், கிரி‌ஷன் பஹதுர் பதாக், ஹர்மன்பிரீத்சிங், குரிந்தர்சிங், வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ஜார்மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், சுமித், நிலகண்டா ‌ஷர்மா, லலித் குமார் உபத்யாய், ஆகாஷ்தீப்சிங், குர்ஜந்த் சிங், மன்தீப்சிங், தில்பிரீத்சிங்.


ஆசிரியரின் தேர்வுகள்...