துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 7 Oct 2018 9:30 PM GMT (Updated: 7 Oct 2018 6:56 PM GMT)

8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

* விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி 39.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபினவ் முகுந்த் 49 ரன்களும், முரளிவிஜய் 44 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 40.3 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 8-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இதனால் தமிழக அணியின் கால்இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

* பார்ல் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் (66 ரன்), விக்கெட் கீப்பர் கிளாசென் (59 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.

* 6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இந்திய அணி அடுத்து ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது.


Next Story