ஹாக்கி

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Junior Hockey: qualifying for the Indian team final

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது
ஜோஹர் பாரு,

6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 கோல்கள் அடித்து 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


பிறகு இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வை சரியாக பயன்படுத்தி சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலிய அணி கடைசி நேரத்தில் கடும் நெருக்கடி அளித்தது. முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் குர்சாஹிப்ஜித் சிங், ஹஸ்பிரீத்சிங், கேப்டன் மன்தீப் மோர், விஷ்ணுகாந்த் சிங், ஷிலானந்த் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முந்தைய லீக் ஆட்டங்களில் இந்திய அணி, மலேசியா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகளை வென்று இருந்தது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி
ஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
2. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
3. உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை ஆக்கி போட்டியில் 2-வது வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி இன்று பெல்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
4. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்
தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
5. உலக கோப்பை ஆக்கியில் வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி; 5-0 கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.