ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம் + "||" + Asian Champions Cup hockey starts today

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடங்க உள்ளது.
மஸ்கட்,

5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆட்டங்களில் மலேசியா-ஜப்பான் (இரவு 8.25 மணி), இந்தியா-ஓமன் (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களம் காணுகிறது. இந்த போட்டித்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் கமல்ஹாசன் பேச்சு
வியாபாரிகள் சம்பாதிப்பதற்காக நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
2. புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம்
புரோ கபடி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
3. ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்
இந்திய ராணுவ தளபதி அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.
4. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி கோல் மழை
6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.