ஹாக்கி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டிசென்னையில் இன்று தொடக்கம் + "||" + The 'Super Six' Akki League match Start in Chennai today

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டிசென்னையில் இன்று தொடக்கம்

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டிசென்னையில் இன்று தொடக்கம்
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஐ.சி.எப்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, தெற்கு ரெயில்வே, சாய் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 ஆயிரம் பரிசாக கிடைக்கும். இதுதவிர சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி-சாய் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழாவில் ஸ்ரீராம் சிட்டி துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.