ஹாக்கி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி + "||" + Super Six Hocky league match ICF Team wins

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,

2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-மத்திய கலால் வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 5-2 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் வரி அணியை வீழ்த்தியது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி தரப்பில் சுனில் மூர்த்தி 2 கோலும், வினோத் ராயர், முட்டப்பா, ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். மத்திய கலால் வரி அணியில் பாலாஜி, சதீஷ் தலா ஒரு கோல் திருப்பினார்கள். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி-ஐ.சி.எப். அணிகள் சந்தித்தன. இதில் ஐ.சி.எப். அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை சாய்த்தது.

ஐ.சி.எப். அணி தரப்பில் தீபக் 3 கோலும், ராகேஷ் ஒரு கோலும் அடித்தனர். இந்தியன் வங்கி அணியில் சுரேந்தர் ஒரு கோல் திருப்பினார். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மத்திய கலால் வரி-தெற்கு ரெயில்வே (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.